புதுக்கோட்டையில் நீர் கலங்களாக வந்ததாக புகார்: எம்எல்ஏ நேரில் ஆய்வு

புதுக்கோட்டையில் நீர் கலங்களாக வந்ததாக மக்கள் புகார் தெரிவித்ததை அடுத்து எம் எல் ஏ நேரில் ஆய்வு செய்தார்.;

Update: 2024-05-03 10:39 GMT

பணிகள் ஆய்வு

கடந்த ஒரு வார காலமாக புதுக்கோட்டை நகர் பகுதிக்கு தண்ணீர் வரத்து குழாய் பழுது காரணமாக நீர் வரத்து இல்லாமல் இருந்த நிலையில் இன்று பழுது சரி செய்யப்பட்டு தண்ணீர் விநியோகிக்கப்பட்டது., இன்று விநியோகிக்கப்பட்ட நீர் காலங்களாக வந்ததாக மக்கள் புகார் தெரிவித்ததை அடுத்து, கோவில்பட்டி பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்து நகராட்சி பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது,

Advertisement

இந்தப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டனர் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு டாக்டர் வை. முத்துராஜா MBBS MLA அவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாநகர் மேயர் திருமதி.திலகவதி செந்தில் அவர்கள், இந்த ஆய்வு பணியின் போது உயர் நீரதேக்க தொட்டியின் மீது ஏறி நடைபெற்று வரும் தூய்மை பணியினை பார்வையிட்டார் உயர்திரு புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்கள்.


இந்நிகழ்வின்போது நகர்மன்ற உறுப்பினர் திரு.அடைக்கலம் அவர்கள், கழக நிர்வாகிகள் திரு. கோவில்பட்டி குமார், திரு கார்த்திக் உள்ளிட்டோறும் நகராட்சி அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News