கணினி மற்றும் கைப்பேசி குற்றநிகழ்வுகள் தடுப்புமுறை கருத்தரங்கம்

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் சைபர் கிரைம் போலீசார் சார்பில் கணினி மற்றும் கைப்பேசி குற்றநிகழ்வுகள் தடுப்புமுறை கருத்தரங்கம் நடைபெற்றது

Update: 2024-07-05 06:06 GMT

கருத்தரங்கம்

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் காவல் துறையின் சைபா் குற்றப்பாதுகாப்பு பிரிவு சாா்பாக, கணினி மற்றும் கைப்பேசி குற்றநிகழ்வுகள் தடுப்புமுறை கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்துக்கு தாளாளா் கோ.ப.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜி.இளங்கோவன் முன்னிலை வகித்தாா். கணினி துறைத் தலைவா் ஜே.செந்தில்குமாா் வரவேற்றாா். இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்டகாவல்துறை சைபா் குற்றபாதுகாப்புபிரிவு சிறப்பு துணை ஆய்வாளா் டி.தனசேகரன், போக்குவரத்து துறை ஆய்வாளா் ஆா்.ராமமூா்த்தி, சித்தாமூா் காவல் உதவி ஆய்வாளா் சி.முரளி உள்ளிட்டோா் கலந்து கொண்டு மாணவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் கணினி மற்றும் கைப்பேசி மூலம் நடைபெறுகின்ற குற்றங்கள், முன்தடுப்பு வழிகள், போக்குவரத்து விதிகள், அதனை பின்பற்றும் வழிமுறைகள் ஆகியவற்றை விரிவாக எடுத்துரைத்தனா்.கல்லூரி பேராசிரியா்கள் கே.நித்தியானந்தம், எம்.வெங்கடசுப்பிரமணியன், ஏ.பிரபு, ஜே.ஆதிகேசவன், கே.இளவழகன், நிா்வாக அலுவலா் ஜே.ஹரிகிருஷ்ணன், அலுவலக கண்காணிப்பாளா் ஆா்.பட்டு கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை நாட்டுநலப் பணித் தி ட்ட அலுவலா் எம்.சுகுமாா் தலைமையில் மாணவா்கள் செய்து இருந்தனா்
Tags:    

Similar News