தியாகி வாட்டாகுடி இரணியன் மருமகன் தோழர் ஆர்.பெரியசாமி மறைவு
தியாகி வாட்டாகுடி இரணியன் மருமகன் தோழர் ஆர்.பெரியசாமி மறைந்தார்.
தியாகி வாட்டாகுடி இரணியன் தங்கை மகனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினருமான தோழர் ஆர்.பெரியசாமி பட்டுக்கோட்டை கரிக்காடு அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அவருடைய இறுதிச் நிகழ்ச்சிகள் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் மூத்த தலைவர் ஆர்.சி.பழனிவேலு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், என்.வி.கண்ணன், எஸ்.தமிழ்ச்செல்வி, எம்.செல்வம், ஆர்.கலைச்செல்வி, மதுக்கூர் எம்.அய்யநாதன், மூத்த தோழர் மெரினா ஆறுமுகம்,
பட்டுக்கோட்டை ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ரெ.ஞானசூரியன், பெஞ்சமின், முருக.சரவணன், விதொச ஒன்றியத் தலைவர் தமிழ்ச்செல்வன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் சி.பக்கிரிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.