திருச்செங்கோட்டில் ரூ.85 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலைகள்
திருச்செங்கோடு நகரப் பகுதியில் ரூ85 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலைகள் அமைக்க பூமி பூஜை நடந்தது.
தமிழ்நாடு அரசின் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருச்செங்கோடு நகரப் பகுதியில் உள்ள ஏழு இடங்களில் ரூ 85 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலைகள்அமைக்கப்பட உள்ளது,அதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு நகராட்சி 12வது வார்டு பகுதியில் இரட்டைப் புளியமரம் அருகில் பிள்ளையார் கோவில் தெருவில் நான்கு மீட்டர் அகலம் 200 மீட்டர் நீளம் கொண்ட கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் மண்டல நகர அமைப்பு திட்ட குழு உறுப்பினருமான மதுரா செந்தில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் நகர்மன்ற முன்னாள் தலைவருமான நடேசன், நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு,நகர் மன்ற துணைத் தலைவர் 12-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்ட திமுக வழக்கறிஞர் அணிதலைவர் சுரேஷ்பாபு,நகராட்சி பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் செந்தில்குமரன், நகர் மன்ற உறுப்பினர்கள் மனோன்மணி சரவண முருகன், தாமரைச்செல்வி மணிகண்டன், ராதா சேகர், செல்வி ராஜவேல், செல்லம்மாள் தேவராஜன், சம்பூரணம், ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தங்களது பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயை தூய்மைப்படுத்தி அகலப்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். உடனடியாக நிறைவேற்ற தரப்படும் என நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு பொது மக்களுக்கு உறுதி அளித்தார்