தேர்தல் பறக்கும் படையினர் மீது கண்டனம்
செங்கல்பட்டு மாவட்டம், சோத்துப்பாக்கத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வியாபாரிகள் மீது அத்துமீறி நடந்துக் கொண்டதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
Update: 2024-04-01 16:29 GMT
செங்கல்பட்டு மாவட்டம், சோத்துப்பாக்கத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறும் ஏற்பாடுகளையும் நடந்து கொள்வதால் சோத்துபாக்கம் வியாபாரி சங்கத்தின் சார்பாக பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் வாகனங்களை சோதனை செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளனர். அப்பொழுது, தேர்தல் பறக்கும் படையினர் பணியில் இருந்த மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலரும், தேர்தல் பறக்கும் படை அலுவலருமான பாஸ்கர் மற்றும் காவலர்கள் சோத்துபாக்கம் வியாபாரி சங்க தலைவரிடம் தேர்தல் பறக்கும் படையினர் வாக்கு வாதம் செய்து தகராறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வியாபாரி சங்கத் தலைவர் மீது கை வைத்து தள்ளிவிட்டு இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்று மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் பின்னர் அங்கே இருந்த தேர்தல் பறக்கும் படையினருக்கு அங்கு கூடி இருந்த 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கும் இடையே வாக்கு வாதமும் வாய்த் தகராறும் ஏற்பட்டது. தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக பறக்கும் படையினருக்கும் வாக்கு வாதம் நடந்தது. தொடர்ந்து வியாபாரிகள் ஒன்று சேர அங்கிருந்த தேர்தல் பறக்கும் படையினர் நைசாக நழுவி சென்றனர்.