கோவில்பட்டியில் உயிரிழந்த திமுக நிர்வாகி குடும்பத்திற்கு எம்பி ஆறுதல்
கோவில்பட்டியில் உயிரிழந்த திமுக மகளிர் அணி நிர்வாகி உருவப்படத்திற்கு கனிமொழி எம்பி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-17 08:58 GMT
ஆறுதல் தெரிவித்த எம்பி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், உடல் நலக்குறைவால் உயிரிழந்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் தமிழ்ச்செல்வி அவர்களின் இல்லத்திற்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி சென்று அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி,
குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகரசபை தலைவர் கருணாநிதி ஆகியோர் உடனிருந்தனர்.