கழிவறையில் விழுந்த கண்டக்டர் உயிரிழப்பு !
நாகர்கோவில் பஸ் நிலையத்தில் கழிவறையில் விழுந்த கண்டக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-26 05:13 GMT
உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள மாங்கரை பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் (52). இவர் திங்கள் சந்தை அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். கடந்த 24ஆம் தேதி நாகர்கோவில் அண்ணா பஸ் ஸ்டாண்டில் உள்ள கட்டண கழிவறையில் மயங்கி விழுந்தவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.பின் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ராமதாஸ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து ராஜதாசின் மகன் கோட்டாறு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.