மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்

குண்ணத்தூர் பகுதியில் மணல் கடத்திச்சென்ற 4 மாட்டுவண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தன. மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களை வலைவீசி தேடிவருகின்றன.

Update: 2024-01-25 06:20 GMT

மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த குண்ணத்தூர் பகுதியில் மணல் கடத்திச்சென்ற 4 மாட்டுவண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். குண்ணத்தூர் பகுதியில் செல்லும் கமண்டல நாக நதிப்படுகையில், கிராமிய காவல் ஆய்வாளர் ராஜாங்கம் தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளர் கன்ராயன் மற்றும் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தவர்கள் போலீஸாரை கண்டதும், வண் டிகளை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து, மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதில், மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களான குண்ணத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (27), பாபு (24), கார்த்திக் (22), கே.சந்தோஷ் (20) என்று தெரியவந்தது. மேலும், 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடிவரு கின்றனர்.
Tags:    

Similar News