மது பாட்டில்கள் பறிமுதல் : திமுக நிர்வாகி கைது !

தூத்துக்குடியில் சட்ட விரோத விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 468 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, திமுக நிர்வாகியை கைது செய்தனர்.;

Update: 2024-04-18 10:44 GMT

மது

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில், நாளை மறுநாள் (ஏப்.19) பாராளுமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்யும் நோக்கத்தோடு சிலர் அதிக அளவில் மது பாட்டில்களை பதுக்கி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Advertisement

இந்நிலையில் முத்தையாபுரம் பகுதியில் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் மற்றும் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் நேசமணி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அப்பகுதியைச் சேர்ந்த பொன் கற்பகராஜ் (33) என்பவர் அனுமதியின்றி விற்பனை செய்ய மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், அவர் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ய வைத்திருந்தது உறுதியானது. அவரிடம் இருந்து 432 மது பாட்டில்கள், 36 பீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து பொன் கற்பகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட கற்பகராஜ் ஸ்பிக் நகர் பகுதி தி.மு.க. நிர்வாகியாக உள்ளார்.

Tags:    

Similar News