உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல்
ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாடாம்பூண்டி கூட்டு சாலையில் நடைபெற்ற சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது.;
Update: 2024-03-19 08:06 GMT
உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல்
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாடாம்பூண்டி கூட்டு சாலையில், தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட எரையூர் கிராமத்தை செர்ந்த சின்னப்பன் என்பவரிடமிருந்து 54,800/- ரூபாயும், செபாஸ்டியன் என்பவரிடமிருந்து 1,13,200/- ரூபாயையும், தேர்தல் பறக்கும் படை புஷ்பராணி தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்து, வாணாபுரம் வருவாய் வட்டாட்சியர் குமரனிடம் ஒப்படைத்தனர்.