திறந்த வெளியில் வைத்திருந்த தின்பண்டங்கள் பறிமுதல் : வழக்கு பதிவு

கோவில்பட்டியில் திறந்தவெளியில் விற்பனைக்கு வைத்திருந்த 25 கிலோ வடை உள்ளிட்ட தின்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பிளாஸ்டிக் மற்றும் அச்சிடப்பட்டதாள் பயன்படுத்திய 16 கடைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Update: 2024-02-15 11:21 GMT

வழக்குப் பதிவு 

தூத்துக்குடி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலா் மருத்துவா் மாரியப்பன் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ஜோதிபாசு, செல்லப்பாண்டி உள்ளிட்டோா் கோவில்பட்டி நகராட்சிப் பகுதியில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த 25 கிலோ வடை, பஜ்ஜி, சமோசா, குழம்பு, டீ பாா்சல் கட்ட வைத்திருந்த 5 கிலோ பிளாஸ்டிக் பைகளும், வடை பரிமாற வைத்திருந்த 3 கிலோ அச்சிட்ட காகிதங்களும், காலாவதி தேதி குறிப்பிடப்படாத 10 கிலோ நொறுக்குத் தீனிகளும், அதிக நிறமி சோ்க்கப்பட்ட 1.5 கிலோ சிக்கனும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. இவற்றை வைத்திருந்து விற்பனை செய்து கடை உரிமையாளா்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், புகாா்கள் ஏதும் இருப்பின், 9444042322 என்ற மாநில உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் அலுவலக வாட்ஸ் அப் எண்ணுக்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் பச ஊா்ா்க் நஹச்ங்ற்ஹ் என்ற புகாா் செயலி மூலமாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ புகாா் அளிக்கலாம் என நியமன அலுவலா் மருத்துவா் ச. மாரியப்பன் தெரிவித்துள்ளாா்.
Tags:    

Similar News