சிவகாசி அருகே அம்மனை வழிப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கதாகூர்

அம்மனை வழிப்பட்ட இண்டியா கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கதாகூர் MP...

Update: 2024-04-08 09:35 GMT

அம்மனை வழிபட்ட காங்கிரஸ் வேட்பாளர்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா 8 ஆம் திருவிழாவின் அம்மன் பல்லாக்கு குதிரையில் வலம் வரும் போது விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில்,

இண்டியா கூட்டணி கட்சியின் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் மாணிக்கதாகூர் MP ஸ்ரீமாரியம்மன் கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார்.கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டன.

மேலும் இந்நிகழ்வின் போது மாவட்ட காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் சிவகாசி மற்றும் திருத்தங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News