காங்கிரஸ் கமிட்டி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
எடப்பாடியில் காங்கிரஸ் கமிட்டி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்;
By : King 24x7 Website
Update: 2023-12-23 16:57 GMT
எடப்பாடியில் காங்கிரஸ் கமிட்டி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் எடப்பாடி,சங்ககிரி,ஓமலூர், மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி.தங்கபாலு தலைமையில் எடப்பாடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கான வியூகம் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது இதில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், எடப்பாடி நகர காங்கிரஸ் தலைவர் நாகராஜ் பூலாம்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் முரளி உட்பட காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.