ஆம்பூரில் மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Update: 2023-11-15 08:06 GMT
ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம்ஆம்பூர் அடுத்த உமராபாத் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி முன்பு தேசிய கிராமபுற 100 நாள் வேலை உறுதி திட்டத்தை தொடர்ந்து மத்திய பாஜக அரசு முடக்கி வருவதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மற்றும் உமராபாத் சுற்றுவட்டார கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அதேபோல வாணியம்பாடி சி.எல். சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் எதிரே பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.