மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Update: 2023-11-16 04:19 GMT
ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் தச்சூர் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பிரசாத் தலைமையில் மகாத்ம காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை சிதைக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும், 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்த வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும். மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் எம். எல்.ஏ ராஜாபாபு, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அருணகிரி, அசோக் குமார், சேகர், ராமலிங்கம், பழனி, முன்னாள் ளைஞர் காங்கிரஸ் மாநிலச் செயலாளர் வினோத்குமார், எஸ்.சிதுறை மாநில துணைத்தலைவர்அன்புதாஸ், மாவட்ட தலைவர் முருகன், வட்டார தலைவர்கள் பந்தாமணி, இளங்கோவன், இளங்கோவன் சோலைமுருகன், பழனி, தாமோதரன், சௌந்தர் குப்புசாமி, சிவானந்தம், ராமலிங்கம், ஆறுமுகம்,வில்லியம், கன்னியப்பன், சிவபாண்டியன், சம்பத் பெருமாள் நிர்வாகிகள் கிருஷ்ணா, கதிர், பாபு, சேதுபதி, சரவணன் மற்றும் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.