கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய பாஜக அரசைக் கண்டித்து கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Update: 2024-03-31 01:11 GMT
கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் வருமான வரித்துறை மூலம் ரூ.1821 கோடி அபராதம் விதித்து காங்கிரஸ் தேர்தல் நிதியை முடக்கி பா.ஜ.க மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி ஆர் லோகநாதன் தலைமையில் நடைபெற்றது .
ஆர்ப்பாட்டத்தில் மாநகர காங்கிரஸ் தலைவர் மிர்ஸாதின், மாநில பொதுக்குழு உறுப்பினர் மாநகர பொருளாளரும் தியாகராஜன் மாநில மாவட்ட நகர வட்டார நிர்வாகிகள் பாலதண்டாயுதம் மணிகண்டன் சிவஞானம் யூமாயின் கபிர் சேகர் மணிசங்கர் தண்டவாளம் சரவணன் நாராயண் சத்யா நவநீதன் ஐ என் டி சி சாதிக் நெல்சன் மோர்ஸ் ஜெயபால் முருகன் ரியாஸ் கமிட்டி சேகர் செல்வராஜ் செல்வம் மகிளா காங்கிரஸ் தலைவி ஜூவா மற்றும் பலர் கலந்து கொண்டனர் .