விழுப்புரத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Update: 2023-11-21 04:53 GMT

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வறுமை ஒழிப்பு திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை முடக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் விழுப்புரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஆர்.டி.வி. சீனிவாசக்குமார் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். நகர தலைவர் செல்வராஜ் வரவேற்றார். மாநில முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜ்குமார், நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எஸ்.சி., எஸ்.டி. மாவட்ட தலைவர் சேகர், மாவட்ட பொதுச்செயலாளர் நடராஜன், வளவனூர் நகர தலைவர் அண்ணாமலை, மகளிர் அணி மாநில இணை செயலாளர் மகேஸ்வரி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தன்சிங், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற தொகுதி தலைவர் ரமணன், மாவட்ட செயலாளர் முத்து, நகர நிர்வாகிகள் துரைசிங், காமராஜ், சுப்பிரமணி, பாஸ்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் இளைஞர் காங்கிரஸ் சட்டமன்ற தொகுதி தலைவர் பிரபாகரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News