மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-11-15 08:10 GMT

ஆர்ப்பாட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தருமபுரி மாவட்டம் அரூரில் காங்கிரஸ் கட்சியினர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு முறையாக நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து பாரத ஸ்டேட் வங்கி முன்பு காங்கிரஸ் கட்சியின் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அணியின் மாவட்ட தலைவர் இம்ரான் கலந்து கொண்டு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு போதிய நிதி உதவி வழங்காத மத்திய அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் அகமது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜய்,  நகர தலைவர் ஆமின் ,ஊடக பிரிவு  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அக்பர்அலி, நாகராஜ், சான்பாஷா ,ஆசிப், இம்ரான், நவ்சாத், ஷாஜீத் ,அப்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News