100 நாள் பணி நிலுவை தொகையை வழங்க கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
Update: 2023-11-15 07:12 GMT
ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கெஜல்நாயக்கண்பட்டி பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 100 நாள் வேலைத்திட்ட பணி ஊதிய நிறுத்தி வைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. கெஜல்நாயக்கன்பட்டி இந்தியன் வங்கி எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கந்திலி மேற்கு ஒன்றிய தலைவர் முனிசாமி தலைமை வகித்தார். இதில் 50 க்கும் மேற்பட்ட காங்கிரசார் கலந்துகொண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் பணியின் நிறுத்தி வைத்துள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க கோரி ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்பாட்டம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்