புதுகையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
ராகுல் காந்தி காந்தியின் பாரத ஒற்றுமை நீதி நடை பயணத்தில் தாக்குதல் நடத்திய பாஜகவின் வரை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
Update: 2024-01-24 02:19 GMT
காங்கிரஸ் போராட்டம்
அசாமில் ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நீதி நடை பயணத்தில் தாக்குதல் நடத்திய பாஜகவின் வரை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்றகள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாநில சிறுபான்மையினர் பிரிவு துணைத் தலைவர் இப்ராஹிம் பாபு, மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர ராமநாதன், வட்டார தலைவர் சூர்யா பழனியப்பன், நகர தலைவர் பாரூக் ஜெயலானி, நகர்மன்ற உறுப்பினர் ஜே ராஜாமுகமது உள்ளிட்டோரம் கலந்து கொண்டனர். அசாமில் தாக்குதல் நடத்திய பாஜகவினரை கண்டித்தும் அவர்கள் மீது உரிய வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.