சார்பதிவாளர் அலுவலகம் கட்டும் பணி - அமைச்சர் துவக்கி வைப்பு

Update: 2023-11-16 01:59 GMT
துவக்க விழா 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் ரூ.188.46 இலட்சம் மதிப்பில் சார்பதிவாளர் அலுவலகம் கட்டும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  ஜெயசீலன் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். தமிழகத்தில் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு எளிதிலும், விரைவாகவும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நிர்வாக கட்டமைப்புகளை செயல்படுத்தி வருகிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டு நிதித்திட்டங்களின் கீழ் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தமிழக அரசு அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறது. அதுமட்டும்மல்லாமல், பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவலர்கள் சிரமமின்றி பணிபுரிய வசதியாகவும் பல்வேறு நிதித்திட்டங்களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து, பல்வேறு துறைகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அரசு அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் ரூ.188.46 இலட்சம் மதிப்பில் சார்பதிவாளர் அலுவலகம் கட்டும் பணிகளுக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிடத்தில் சார்பதிவாளர் அறை, பதிவு அறை, அலுவலகப்பகுதி, பல்நோக்கு அறை, கணினி அறை, யூ.பி.எஸ் அறை, கழிப்பறைகள், சாய்வு தளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 4310 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட உள்ளது என அமைச்சர்  தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சிங்கராஜ், இராஜபாளையம் நகர்மன்றத் தலைவர்  பவித்ரா ஷியாம், பத்திரப்பதிவு துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News