தார்சாலை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தணும் !

மண்ணச்சநல்லூரில் கல்பாளையம் பிரதான சாலையில் தார்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்குமாறு எம்எல்ஏ கதிரவனிடம் பொதுமக்கள் கோரிக்கை எழுப்பினர்.;

Update: 2024-06-17 08:53 GMT

 மண்ணச்சநல்லூரில் கல்பாளையம் பிரதான சாலையில் தார்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்குமாறு எம்எல்ஏ கதிரவனிடம் பொதுமக்கள் கோரிக்கை எழுப்பினர். 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் நெடுஞ்சாலை துறை,பல்வேறு அரசுத்துறை பொதுமக்கள் மற்றும் மாற்று கட்சியினர் கொடுக்கும் கோரிக்கைகளை விசாரித்து நிறைவேற்றி வருகிறார். இந்நிலையில் மண்ணச்சநல்லூர் கல்பாளையம் பிரதான சாலையில் தார்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைப்பெற்று வந்த்து ஆனால் இந்த பணிகள் பாதியில் நிறுத்தி கடந்த 10 நாட்களுக்கு மேல் ஆகிறது..தார் சாலை பணிகள் இன்றளவும் நடைபெறவில்லை.

Advertisement

இந்த பிரதான சாலையின் மேல் வீடுகள், உணவகங்கள், பெட்டி கடைகள், தனியார் பள்ளி கூடம் உள்ளது.சாலை அமைப்பதற்க்காக போடப்பட்ட சிப்ஸம் கலந்த பவுடர் அனைத்தும் சாலையின் மேல் உள்ள வீடுகள், கடைகள் உள்ளே செல்கின்றது. இதனால் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை மிகவும் சிரம்ப் படுகின்றனர்.எனவே மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் நெடுஞ்சாலை துறையினரிடமும், மண்ணச்சநல்லூர் பேருராட்சி தலைவர், செயல் அலுவலரிடமும், எடுத்துக் கூறி விரைந்து தார்சாலை பணிகளை் அமைத்து தருமாறு பொதுமக்கள் எம்எல்ஏவுக்கு கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News