குடும்பத் தகராறில் கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
திருவட்டார் அருகே குடும்பத் தகராறில் கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவட்டார் அருகே கொல்லிக்கோட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் ஜோஸ் (வயது 34). இவர் கட்டிட வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சசிகலா (31). இவர்களுக்கு 2, குழந்தைகள் உள்ளன. தினமும் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது மது அருந்தி விட்டு வீட்டில் வந்து தகராறு செய்வது வழக்கம். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன் மது அருந்தி விட்டு தகராறு செய்தார்
. இதனால் இவரது தாய் மேரி திருவட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் அழைத்து விசாரணை செய்து தகராறு செய்ய கூடாது என்று எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.இதனால் மனம் உடைந்த ஸ்டாலின் ஜோஸ் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குபோட்டு நீ தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்ற சசிகலா வீட்டில் வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஸ்டாலின் ஜோஸை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது ஸ்டாலின் ஜோஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். சசிகலா கொடுத்த புகாரின் பேரின் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.