காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக கலந்தாய்வு கூட்டம்
கடலூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக ஆற்ற வேண்டிய களப்பணிகள் குறித்து வேகாக்கொல்லை பகுதியில் எம்எல்ஏ கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.;
Update: 2024-04-14 03:22 GMT
கலந்தாய்வு கூட்டம்
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என நெய்வேலி தொகுதி தேர்தல் அலுவலகத்தில் வேகாக்கொல்லை திமுக நிர்வாகிகள், களப்பணியாளர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.