கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் ஆலோசனைக் கூட்டம்
கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் தேர்தல் பணிக்குழு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் சோமாசிபாடி, கீழ்பென்னாத்தூர் மற்றும் நகரம், கரிக்கலாம்பாடி ஆகிய இடங்களில் வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பணியாற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஆறு முகம் தலைமையில் நடந்தது. ஒன்றிய துணை செயலாளர்கள் சிவக்குமார், பரசுராமன், தேவேந்தி ரன், மாவட்ட பிரதிநிதி குப்பு சாமி, நகர செயலாளர் அன்பு, பேரூராட்சி தலைவர் சரவணன், துணைத்தலைவர் தமிழரசி சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆலோசனைக் கூட்டங்களில் துணை சபா நாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் கள் மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு வாக்காளர்கள் விவரங்கள் சேகரிப்பதற்கான படிவங்கள், வாக்காளர் பட்டியல் ஆகியவற்றை பேசியதாவது: வழங்கி தேர்தல் காலத்தில் பணி கள் முன்பு போன்று இல்லாமல் இப்போது மாறிவிட்டது.நவீன காலத்திற்கு ஏற்ப தேர்தல் பணிகளை செய்ய தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் 3வகையானபணிகளை மேற்கொள்ள வேண்டும். வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தல் இன்னும் 3 மாத காலத்தில் வரவிருக்கிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கும் ஒதுக்கப்பட்ட100 வாக்கு கள் என்ற அளவில் வீடு, வீடாக சென்று வாக்கா ளர்களை சந்தித்து அவர்களின் விவரம் குறித்ததகவல் களை வைத்துக் கொள்ள வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களையும், மாற்றுத் திறனாளிகளையும் ஒரு படிவத்தில் அனைத்து விவரங்களையும் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.
திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு வாக்காளர்களின் முழு விவரங்களையும் பதிவு செய்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் மொத்த உறுப்பினர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்து கொள்ளவேண்டும். கடந்த 2 3/4 ஆண்டு ஆட்சி காலத்தில் அரசு திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். மகளிர் உரிமைத் தொகை,புதுமைப் பெண் திட்டத்தில் கல்லூரியில் படிக்கும் மாணவிக ளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை, மகளிர் சுய உதவி குழுக் கடன் தள்ளுபடி, பயிர்க் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளு படி போன்ற விவரங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். இதில் யார்?யார்? எந்த வகையில் பயன் பெற்றுள்ளனர். என்பது போன்ற விவரங்களையும் ஒவ்வொரு பொறுப்பாளரும் அவர்களின் தகவல்களை சேகரித்து பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் கட்சி தகவல் களை வாட்ஸ் அப்பில் போடுவதை பார்த்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பொறுப்பாளரும் அவரவர்களுக்கான பணிகளை விரைந்து முடித்துஅதற்கா ன படிவங்களை பூர்த்தி செய்து 5தினங்களுக்குள் தேர்தல் பணிக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் ஒன்றிய அவைத் தலைவர் ரவி ரெட்டியார்,மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் நித்யா,ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சேகர், ஒன்றிய ஆதி திராவிடர் நலக்குழு அமைப்பாளர் அன்பழகன்,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சதீஷ், கிளைச் செயலாளர்கள் அரி பாலன், சுதாகர், ஏழு மலை மற்றும் நகர நிர்வாகிகள்,பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண் டனர்.