திருச்சியில் ஆலோசனை கூட்டம்

திருச்சியில் அதிமுக தெற்கு மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;

Update: 2024-02-17 15:43 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பான முறையில் பணியாற்றி, நமது திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திருச்சி, கரூர், பெரம்பலூர் ஆகிய நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை மூன்றுக்கு / மூன்று என வெற்றியடைய செய்ய அயராதுபாடுபட வேண்டும்.

வருகின்ற 23.02.2024 அன்று வாழவந்தான் கோட்டையில் அருகருகே அமைக்கப்பட்டுள்ள இரட்டை சுங்கசாவடிகளை கண்டித்து நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தினை சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என் மனம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன 3 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று கொண்டிருக்கும் தெருமுனை பிரச்சாரங்களை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து ஒத்துழைப்பு தந்து கொண்டிருக்கும் நிர்வாகிகளுக்கும், கழக தொண்டர்களுக்கும், நன்றியினை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக செயலாளர்கள் மற்றும் சார்பு அணி செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News