தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் நகர் சங்கு பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில். தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் மாவட்ட ஆலோசனை கூட்டம் ஜனவரி - 21ம் தேதி நடைபெற்றது.
மாநில தலைவர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,தொகுப்பூதிய தூய்மை தொழிலாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் , ஓய்வு பெற்றவர்களுக்கு மாத ஓய்வூதிய தொகையாக ரூ.2000 வழங்க வேண்டும், ஓய்வு பெறுபவர்களுக்கு ரூ.50,000 ஒட்டுமொத்த பணப்பலன் வழங்க வேண்டும்,
மேலும் இக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 22.ம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பது என்றும், ஜனவரி - 23 ந் தேதி சென்னை பனகல் மாளிகை சைதாப்பேட்டையில் நடைபெற உள்ள ஒரு நாள் அடையாள கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அனைத்து தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனை தொடர்ந்து தூய்மை தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டது, நிகழ்ச்சியில் தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் நலச்சங்க உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.