வன உயிரினங்களை பாதுகாப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம்
வன உயிரினங்களை வேட்டையாடுவதிலிருந்து பாதுகாப்பது குறித்து தர்மபுரியில் மாவட்ட அளவிலான குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
Update: 2024-04-05 16:25 GMT
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு வன உயிரினங்களை சட்டத்திற்கு புறம்பான மின் இணைப்பு, மின்சார ஒயர்கள், கம்பி வலைகள் மற்றும் நாட்டு வெடிமருந்து (அவிட்டுகாய்) ஆகியவற்றை கொண்டு வேட்டையாடுவதிலிருந்து பாதுகாக்க மாவட்ட அளவிலான குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இக்குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இ.ஆ.ப., தலைமையில் இன்று நடைபெற்றது.
உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், தருமபுரி மாவட்ட வன அலுவலர் கா.இராஜாங்கம், இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.