வாக்கு எண்ணும் அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம்

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் அலுவலகத்தில் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-05-30 13:09 GMT

மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

தேர்தல் நடத்தும் அலுவலர், எண்.06 காஞ்சிபுரம் (தனி) பாராளுமன்ற தொகுதி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் இன்று வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகளான வாக்கு எண்ணும் அறைகளின் அமைப்பு ஏற்பாடுகள், தபால் வாக்கு எண்ணும் அறைகள், ஊடக கண்காணிப்பு அறை மற்றும் அலுவலர்கள்/முகவர்கள் பயன்படுத்த வேண்டிய வழிகள் மற்றும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆகியவற்றை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் மற்றும் அறிவுரைகள் தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகளை தவறாமல் அனைத்து அலுவலர்களும் பின்பற்ற வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் நாராயணசர்மா. , வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி , காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் செந்தில் முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு.பார்த்தசாரதி, காஞ்சிபுரம் மற்றும் எண்.06 காஞ்சிபுரம் (தனி) பாராளுமன்ற தொகுதிகுட்பட்ட அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News