நீர் பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்ட திருத்தம் குறித்து ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை குறித்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு

Update: 2024-02-16 18:18 GMT

நீர் பாசன முறை ஆலோசனை கூட்டம்

சென்னை மண்டல நீர் வள ஆதாரத்துறை சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டம்-2000 திருத்தம் குறித்த சென்னை மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

தமிழகத்திலுள்ள விவசாயிகள் தங்கள் விவசாயத்துக்குத் தேவையான நீரைப் பொதுப்பணித்துறைக் கட்டுப்பாட்டிலுள்ள நீர் நிலைகளில் இருந்து நியாயமான முறையில் பயன்படுத்திக் கொள்ள `தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டம்-2000' -ஐ  கடந்த 2001-ல் தமிழக அரசு கொண்டு வந்தது. இதனை பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பால் கடந்த 2002-ல் நடைமுறைக்கு வந்தது.

அதன் மூலம் நீரைப் பயன்படுத்துவோர் சங்கம் தமிழகத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மூன்றடுக்கு அமைப்பில் உள்ள இந்த சங்கத்தில் நிர்வாகிகளாக உள்ளவர்கள், அதிகாரிகளிடம் சென்று பேசவும், விவசாயத்துக்கு தேவையான நேரத்தில் தண்ணீர் கொண்டு வரவும், பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் தண்ணீர் சென்று சேரவும் உதவி செய்வார்கள்.  இந்த சட்ட விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்ததின் பேரில் தற்போது இது மண்டல அளவிலான திருத்தம் குறித்த கோரிக்கைகள் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் வகையில் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் சென்னை மண்டல நீர்வள ஆதாரத்துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலர் சமூக கூடத்தில் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏரி பாசன விவசாயிகள் சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்த சட்ட அமைப்புகளை விளக்கியும் அதில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து விவசாயிகள் கருத்து தெரிவிக்கலாம் என நீர்வள ஆதாரத்துறை சென்னை மண்டல பொறியாளர் அசோகன் தெரிவித்தார். இரண்டு நாள் நடைபெறும் இந்த சட்ட திருத்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தலைப்புகளின் கீழ் கருத்து கேட்கப்படுகிறது.

இதுகுறித்து தென்னேரி பாசன சங்கத் தலைவர் வரதராஜுலு கூறுகையில், பாசன சங்கத்தின் கீழ் ஏரிகளை ஆண்டுக்கு ஒரு முறை பராமரிப்பு செய்ய வேண்டும் எனவும், ஏரிகளில் வண்டல் மண் எடுக்கும் நிலையில் அதன் வருவாயில் பாதி சங்க கணக்கில் வைக்க வேண்டும், ஏரியில் வளர்ப்பு மீன் குத்தகை விடும் நிலையில் நீர் திறத்தல் குறித்து பாசன சங்க நிர்வாகிகளுடன் கலந்தலோசித்த பின்பு நீர் திறப்பு செயல்பட வேண்டும். இதுபோன்ற நிலைகளை நிதிகளைக் கொண்டு அந்தந்த பகுதி ஏரிகளை தொடர்ச்சியாக பராமரிக்கும் வாய்ப்புகள் நீர் பாசன சங்கத்திற்கு கிடைக்கும் என்பதும் இதன் மூலம் நிலையான இந்த சட்டம் செயல்படுத்த ஏதுவாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த கூட்டத்தில் நீர்வள ஆதாரத்துறை சார்பில் உயர் அலுவலர்களும், பாசன சங்கத் தலைவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News