பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க உள்ளதால், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க உள்ளதால், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
பின்னர்; மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் பேசுகையில் : பள்ளி வளாகம், வகுப்பறை, குடிநீர்த்தொட்டி மற்றும் கழிப்பறை முழுமையாக 100% சுத்தம் செய்யப்பட வேண்டும். தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டதை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் உறுதி செய்து கொள்ள வேண்டும். அரசால் வழங்கப்படும் அனைத்து விதமான நலத்திட்ட உதவிகளும் பள்ளிகள் திறந்த பிறகு, மாணவர்களுக்கு தவறாமல் வழங்கப்பட வேண்டும்.
பள்ளி வயதுக்குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லாக்குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்க்க தலைமையாசிரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் ஆதார் மையங்கள் அந்தந்தப் பள்ளியிலேயே துவக்கி வைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்கள்.