அரசின் இணையதளத்தில் பதிவு செய்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடியில் சுற்றுலா வழிகாட்டிகளுக்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுதல் மற்றும் அரசின் இணையதளத்தில் பதிவு செய்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி. தலைமையில் நடைபெற்றது.

Update: 2023-12-07 11:15 GMT

ஆலோசனை கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (06.12.2023) சுற்றுலாத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா அமைப்பாளர்கள், பயண முகவர்கள், சுற்றுலாப் போக்குவரத்து அமைப்பாளர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளுக்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுதல் மற்றும் அரசின் இணையதளத்தில் பதிவு செய்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் இயங்கும் சுற்றுலா அமைப்பாளர்கள், பயண முகவர்கள், சுற்றுலா போக்குவரத்து அமைப்பளர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் அரசிடம் பதிவு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் சுற்றுலாத்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை தமிழகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நிரந்தரமான மகிழ்ச்சியான அனுபவத்தை உறுதி செய்யும் வகையில் சுற்றுலாவின் இன்றியமையாத பாரம்பரிய சுற்றுலா அமைப்பாளர்கள், பயண முகவர்கள், சுற்றுலாப் போக்குவரத்து அமைப்பளர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் அவர்களின் சேவையை மேம்படுத்தும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சுற்றுலா அமைப்பாளர்கள், பயண முகவர்கள், சுற்றுலாப் போக்குவரத்து அமைப்பளர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் www.tntourismtors.com என்ற இணையத்தளம் வாயிலாக சுற்றுலாத்துறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் பதிவு செய்யாமல் செயல்படும் சுற்றுலா தொழில் நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு சுற்றுலா அலுவலர், சுற்றுலா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரைத்தளம் tothoothukudi@gmail.com என்ற மின்னஞசல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி. தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ்குமார். மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், சுற்றுலா அலுவலர் சி.திருவாசன், அரசு அலுவலர்கள், சுற்றுலா அமைப்பாளர்கள், பயண முகவர்கள், சுற்றுலாப் போக்குவரத்து அமைப்பளர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள்; பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News