திண்டிவனம் அரசு கல்லூரியில் இன்று கலந்தாய்வு
திண்டிவனம் அரசு கலைக்கல்லுாரியில் இளநிலை பட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று துவங்குகிறது.
Update: 2024-06-24 04:02 GMT
திண்டிவனம் அரசு கலைக்கல்லுாரியில் 2024-25ம் ஆண்டிற்கான இளநிலை பட்ட படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வு இன்று 24ம் தேதி நடக்கிறது.இதில், பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், புவியமைப்பியல், கணினி அறிவியல், புள்ளியல் பாடங்களுக்கு நடக்கிறது. 25ம் தேதி பி.காம்., மற்றும் பி.பி.ஏ., (வணிக நிர்வாகவியல்) பாடத்திற்கும், 26ம் தேதி பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு ஆகிய பாடப்பிரிவிற்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. இத்தகவலை கல்லுாரியின் முதல்வர் (பொறுப்பு) நாராயணன் தெரிவித்துள்ளார்.