நுகர்பொருள் வாணிப கிடங்கு - முதல்வர் திறந்து வைப்பு
சின்னசேலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கினை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
Update: 2024-02-29 06:10 GMT
சின்னசேலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கினை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் சின்னசேலம் அரசு தொழில் பயிற்சி மையம் அருகே 2 கோடி 65 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட நவீன வட்ட செயல்முறை கிடங்கு கட்டப்பட்டது. இதில் சின்னசேலம் பகுதியில் உள்ள 91 ரேஷன் கடைகள், 246 மதிய உணவு திட்ட மையங்கள், உண்டு உறைவிட பள்ளி, 73 காலை உணவு திட்ட மையங்கள், கல்வராயன்மலையில் உள்ள ரேஷன் கடைகள் ஆகியவற்றின் உணவு பொருட்கள் சேமித்து, அனுப்பி வைக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இச்சேமிப்பு கிடங்கினை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனையடுத்து உதயசூரியன் எம்.எல்.ஏ., குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். விழாவில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கு முதுநிலை மண்டல மேலாளர் நந்தகுமுார், ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன், தி.மு.க., நகர செயலாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் பூவரசன், கண்காணிப்பாளர்கள் கார்த்திக், தனம், தவமணி, வாசன், கிடங்கு பொறுப்பாளர் பாசந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.