மலையோர பகுதிகளில் தொடரும் மழை; அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மலையோர பகுதியில் பெய்து பெரும் தொடர் மழையால் பேச்சிபாறை அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

Update: 2024-05-23 04:40 GMT

  மலையோர பகுதியில் பெய்து பெரும் தொடர் மழையால் பேச்சிபாறை அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.  

குமரி மாவட்டத்தில் கோடை மழை பெய்து வந்த நிலையில் வளிமண்டல கீழ டுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஒரு வாரமாகவே மித மான மழை பெய்தது. ஆனால் தற்போது வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் தற்போது மழை தீவிரம் அடைந்து கனமழையாக மாறி இருக்கிறது.

பேச்சிப்பாறை அணையின் நீர்வரத்து பகுதிகளான மேல் கோதையாறு, மாறாமலை, தோட்டமலை, கீழ் கோதையாற்றில் கன மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை அணைக்கு உள்ளே வரும் கோதையாறு, மயிலாறு, மோதிரமலையாறு,கிளவியாறு,சாத்தையாறு, கல்லாறு உள்ளிட்ட காட்டாறுகளில் வெள்ளம் நிரம்பிபாய்கிறது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையின் நீர்மட்டத்தைக் கட்டுப்பாடான அளவில் வைக்கும் வகையில் அணையின் மறுகால் மதகுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு 500 கன அடிதண்ணீர் வெளியேற்றப்பட்டது. இன்று காலை நிலவரப்படி பேச்சிபாறை அணையின் நீர்மட்டம் 45.25 அடியாக உள்ளது.பெருஞ்சாணி அணை 51.3 அடியாக உயர்ந்துள்ளது ,

Tags:    

Similar News