கொல்லங்கோடு அருகே மின்சாரம்  தாக்கி ஒப்பந்த பணியாளர் காயம்

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே மின்சாரம் தாக்கி ஒப்பந்த பணியாளர் காயமடைந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-01-26 09:55 GMT
மின்சாரம் தாக்கி படுகாயம்

குமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சி சார்பில் காஞ்சாம்புரம் சந்தையின் பின்பகுதியில் உள்ள பாதையில் நேற்று ஒப்பந்த பணியாளர் மூலம் மின் கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்றது. அப்போது ஒப்பந்த பணியாளர்கள் அந்த பகுதியில் உள்ள மின்மாற்றியை அணைத்து பூட்டு போட்டு விட்டு சென்றுள்ளனர்.

தொடர்ந்து மதியம் ஒப்பந்த பணியாளர் ரதிஷ் என்பவர் மின்கம்பத்தில் விளக்கு மாட்டிக்கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் ரதீஷை மீட்டு, நித்திரவிளையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மின்சாரம் தாக்கி சதீஷ் விழுந்த போது அந்த பகுதியில் நின்ற ஒரு சப்போட்டா மரத்தின் கிளை மீது விழுந்து, அதன் பிறகு தரையில் விழுந்துள்ளார். அதன் காரணமாக லேசான காயத்துடன் தப்பினர் என்று சக ஊழியர்கள் தெரிவித்தனர்.

இது சம்பந்தமாக நம்பாளி மின் அலுவலகத்தில் தொலைபேசி மூலம் புகார் செய்தனர். அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று பள்ளி ஆண்டு விழா நடைபெற்றுள்ளது. மின்தடைப்பட்ட ஏற்பட்டவுடன் பவர் யூனிட் ஆன் செய்து மின் இணைப்பு கொடுத்துள்ளனர். தவறுதலான முறையில் மின் இணைப்பு கொடுத்ததால் மின்சாரம் தாக்கி ஒப்பந்த பணியாளர் தூக்கி வீசப்பட்டது தெரிய வந்தது.

Tags:    

Similar News