தூத்துக்குடி மாவட்டத்தில் சீரமைப்பு பணிகளில் நிறுவனங்கள் பங்களிப்பு
அதிகனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் பெருநிறுவனங்களின் சமூக பொறுப்பான்மைத் திட்டத்தின் கீழ் முக்கிய தொழில்நிறுவனங்கள் பங்கேற்பதற்கான கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அதிகனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் பெருநிறுவனங்களின் சமூக பொறுப்பான்மைத் திட்டத்தின் கீழ் முக்கிய தொழில்நிறுவனங்கள் பங்கேற்பதற்கான கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் 17.12.2023 மற்றும் 18.12.2023 அன்று ஏற்பட்ட அதிக கனமழையின் காரணமாக தூத்துக்குடி, கருங்குளம், திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி மற்றும் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள குக்கிராமங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், வீடுகளில் மழைநீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் பயிலும் பள்ளிக்கட்டிடங்கள், சிறு குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதர நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் கட்டிடங்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் பெரும் சேதமடைந்துள்ளன. மேலும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும், வாழ்வாதாரங்களையும், கால்நடைகளையும் இழந்துள்ளனர். விவசாயப் பயிர்களுக்கும் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு அத்தியாவசிய தேவையான குடிதண்ணீர் குழாய்கள் மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது. நகரங்களை இணைக்கும் தார்ச்சாலைகள், கிராமச்சாலைகள், மக்கள் பயன்படுத்த இயலாத வண்ணம் பாதிப்படைந்துள்ளது. கிராமங்களில் ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம்,
பேரூராட்சி மன்ற அலுவலகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் மழை வெள்ளத்தால் தளவாடப்பொருட்கள் பழுது அடைந்துள்ளது. புனித தலங்களான கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளது. மேற்கண்ட பாதிப்புகளை சீரமைப்பு செய்திட தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெரு நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவது தொடர்பாக, மேற்படி நிறுவனங்களின்
பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது என தெரிவித்தார். கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ்குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/திட்ட இயக்குநர் ஆர்.ஐஸ்வர்யா, திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் வீரபுத்திரன், மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.