வித்யா விகாஸ் கல்வி நிறுவனத்தில் பட்டமளிப்பு விழா - ஈஸ்வரன் எம்.எல்.ஏ பங்கேற்பு
வித்யா விகாஸ் கல்வி நிறுவனத்தில் பட்டமளிப்பு விழா - ஈஸ்வரன் எம்.எல்.ஏ பங்கேற்பு;
By : King 24x7 Website
Update: 2024-02-03 10:20 GMT
வித்யா விகாஸ் கல்வி நிறுவனத்தில் பட்டமளிப்பு விழா - ஈஸ்வரன் எம்.எல்.ஏ பங்கேற்பு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் 724 மாணவ மாணவிகளுக்கு முதுகலை மற்றும் இளங்கலை பட்டங்கள் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கலந்து கொண்டு 664 இளங்கலை பட்டதாரிகள், 80 முதுகலை பட்ட பட்டதாரிகள் என மொத்தம் 724 நபர்களுக்கு பட்டங்களை வழங்கி விழா பேருரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர்கள் குணசேகரன், சிங்காரவேல், ராமலிங்கம் முத்துசாமி முன்னிலை வகித்தனா். இதில் நிர்வாக அறங்காவலர்கள், அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.