செஞ்சி ஒன்றியத்தில் உள்ள சத்துணவு மையங்களுக்கு சமையல் பாத்திரங்கள்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியத்தில் உள்ள 132 சத்துணவு மையங்களுக்கு சமையல் பாத்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-03-06 08:22 GMT

செஞ்சி ஒன்றியத்தில் உள்ள சத்துணவு மையங்களுக்கு சமையல் பாத்திரங்கள்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சத்துணவு மையங்களுக்கு புதிய சமையல் பாத்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ஷீத்தாலட்சுமி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் முல்லை முன்னிலை வகித்தார்.

இதில் ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் கலந்துகொண்டு 132 சத்துணவு மையங்களுக்கு புதிய சமையல் பாத்திரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனி, மணிமாறன், சத்துணவு உதவியாளர் சரஸ்வதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News