திருப்பத்தூரில் கூட்டுறவு வாரவிழா: அமைச்சார் எ.வ.வேலு பங்கேற்பு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே நடைபெற்ற 70 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் கூட்டுறவு சங்கங்களில் உள்ளவர்கள் மேகத்தைப் போல இருக்க வேண்டும் காக்காவை போல இருக்கக் கூடாது அமைச்சர் எ.வ வேலு பேச்சு!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் திருவண்ணாமலை சாலை அருகே அமைந்துள்ள தனியார் திருமண வளாகத்தில் கூட்டுறவு துறை சார்பாக கூட்டுறவு அமைப்புகளை பரவலாக்குதல் மற்றும் எளிமைப்படுத்துதலுக்காக மாவட்ட அளவிலான எழுபதாவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்கள் அரசு அலுவலர்கள் கூட்டுறவாளர்கள் ஏராளமானூர் கலந்து கொண்ட இந்த விழாவில் மகளிர் சுய உதவிக் குழு கடன் மாற்றுத்திறனாளி கடன் நாட்டுப்புற கலைஞர் கடன் சிறு வணிக கடன் உள்ளிட்ட 10 துறைகளின் கீழ் 17 கோடியே 33 லட்சம் ரூபாய் கடன்கள் வழங்கப்பட்டன.
மேலும் மாவட்ட அளவில் உள்ள 93 கூட்டுறவு நிறுவனங்களில் சிறப்பாக செயல்பட்ட 21 கூட்டுறவு நிறுவனங்கள் மூன்று விற்பனையாளர்கள் ஒரு கட்டுனருக்கு இருக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏவா வேலு பேசுகையில்... தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளும் அரசை சார்ந்து இருக்கின்றன. ஒரே ஒரு துறை மட்டும் உறவை சார்ந்திருக்கின்றன
அதுதான் கூட்டு உறவு துறை. நாம் அனைவரும் கூடி உறவாடி சங்கம் அமைப்பது தான் கூட்டு உறவு சங்கம். இந்த கூட்டுறவு சங்கத்தில் உள்ளவர்கள் மேகத்தைப் போல் இருக்க வேண்டும் என்றும் காகங்களைப் போல் இருக்கக் கூடாது என்றும் கூறினார். மேலும் நான் கூட்டுறவுத்துறை அமைச்சராக வருவதற்கு முன்பு கூட்டுறவு சங்கங்களில் மகளிர்க்கு கடன் வழங்கியது இல்லை.
இதுகுறித்து நான் திருவண்ணாமலையில் ஆய்வு செய்த போது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மகளிருக்கு கொடுக்கப்பட்ட கடன்கள் முழுமையாக திரும்பி செலுத்தப்பட்டிருக்கின்றன விவசாயிக்கு கொடுக்கப்பட்ட கடன்கள் முன் பின் தான் செலுத்தப்பட்டிருக்கின்றன என்கிற தகவல் தெரிந்ததும் ஏன் நாமும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளுக்கு கடன் கொடுக்கக் கூடாது என்று முன்னாள் முதலமைச்சர் கலைஞரிடம் கேட்டு உடனடியாக அதற்கான கோப்பில் கையெழுத்திட்டேன்.
எனவே இனிவரும் காலங்களில் கூட்டுறவு சங்கத்தில் சேர்கின்றவர்கள் அலுவலர்கள் காக்காவை போல் உள்ளதை பியர்த்து எடுத்துக் கொண்டு செல்லாமல் ஒன்றாக கூடி உறவாடி பயனடையுங்கள் என்று கூறினார்.