கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு முன்பதிவு ஏப்.29 இல் தொடக்கம்
பட்டுக்கோட்டை கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு முன்பதிவு ஏப்.29 இல் தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பட்டுக்கோட்டை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25- ஆம் கல்வியாண்டிற்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான முன்பதிவு வருகிற 29- ஆம் தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த பயிற்சி செப்டம்பர் மாதம் தொடங்கப்படுகிறது. பயிற்சி காலம் ஓர் ஆண்டு ஆகும். இரு பருவ முறைகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். தமிழில் மட்டுமே பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
இதில் சேருவதற்கு 17 வயது நிரம்பியிருக்க வேண்டும். 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பயிற்சிக்கான நிபந்தனைகள், பயிற்சி கட்டணம் விவரங்கள் www.tncuicm.com என்ற இணையதள முகவரியில் வெளியிடப்படும். மேலும் இந்த பயிற்சி சேர விருப்பம் உள்ளவர்கள் மேற்கண்ட இணையதள முகவரி மூலமாகவோ, பயிற்சி மையத்தின் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர் முதல்வர், பட்டுக்கோட்டை கூட்டுறவு மேலாண்மை நிலையம் தாலுகா அலுவலகம் அருகில், முத்துப்பேட்டை சாலை, நாடிமுத்து நகர்- அஞ்சல் பட்டுக்கோட்டை - 614602 தஞ்சாவூர் மாவட்டம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.