மாநகராட்சி மக்கள் குறைதீர் முகாம்
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது
Update: 2024-01-03 06:52 GMT
திருநெல்வேலி மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது.திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் ராஜு முன்னிலை வகித்தார். இதில் மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் சாலை வசதி,குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மனுக்களை அளித்தனர். இந்த மனுக்களை பெற்று கொண்ட மேயர் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக பொது மக்களுக்கு வாக்குறுதி அளித்தார்.