சங்ககிரி அருகே கனமழையில் குடிசை வீடு இடிந்து சேதம்
By : King 24X7 News (B)
Update: 2023-11-07 11:25 GMT
இடிந்து விழுந்த குடிசை வீடு
சேலம் மாவட்டம் சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கத்தேரி, தேவூர், அரசிராமணி, புள்ளாக்கவுண்டம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
இதனிடையே புலள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியில் வசித்து வரும் கமலா என்ற கணவனை இழந்த பெண்ணின் குடிசை வீடு கனமழையால் இடிந்து விழுந்து சேதமடைந்தது அந்த குடிசை வீட்டில் தங்கிருந்த பெண் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். சங்ககிரி அருகே கனமழையால் குடிசை வீடு இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.