குடிசை வீடு எரிந்து சேதம் - தமிழக வெற்றி கழகத்தினர் நிவாரணம்

மயிலாடுதுறை அருகே வயதான தம்பதியினரின் குடிசை வீடு எரிந்து சேதமடைந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தினர் அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.

Update: 2024-04-15 05:50 GMT

நல உதவி 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பழைய கூடலூர் கிராமத்தை சேர்ந்த வயதான தம்பதியினரின் மண் குடிசை வீடு எரிந்து சேதமடைந்தது. துரைசாமி (72) அம்சவல்லி தம்பதியினர் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது மின் கசிவு ஏற்பட்டு கூறைவீடு முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்தது. வீட்டில் வைத்திருந்த பீரோ, கட்டில், டிவி, மின்விசிறி மளிகை சாமான்கள் உள்ளிட்ட சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து கருகியது

. இதனை அறிந்த தமிழக வெற்றிக் கழகத்தினர் மாவட்டத் தலைவர் குட்டி கோபி தலைமையில் துரைசாமியின் வீட்டிற்கு சென்று எரிந்த வீட்டை பார்வையிட்டு வேட்டி, சேலை, அரிசி, போர்வை, பாய்,தலையணை மற்றும் மளிகை சாமான்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கி ஆறுதல் தெரிவித்தனர். இதில் குத்தாலம் ஒன்றிய இளைஞரணி தலைவர் ஹரிஷ், உள்ளிட்ட தமிழக வெற்றி கழகத்தின் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News