ஆத்தூரில் ரூ.47 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்
ஆத்தூரில் அருகே புதுப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில்ரூ. 47 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது.
By : King 24X7 News (B)
Update: 2024-05-07 12:52 GMT
சேலம் மாவட்டம், ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் ஆத்தூர், தலைவாசல், கள்ளக்குறிச்சி பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 277 விவசாயிகள் 1,895 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
ஆத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை பகுதியைச் சேர்ந்த 15 வியாபாரிகள் பருத்தியின் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்திருந்தனர். இந்நிலையில் பி.டி.ரகம் குவிண்டால் ரூ.7,069 முதல் ரூ.7,899 வரை, டி.சி.ஹெச்., ரக குவிண்டால் ரூ.8,569 முதல் 9,669 ரூபாய் வரை, கொட்டு பருத்தி (கழிவு) 3,439 முதல் 6,269 வரை விற்பனையானது. மொத்தம் 1,895 மூட்டை , 682.23 மொத்த குவிண்டால் பருத்தி ரூ 47 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.