உசிலம்பட்டியில் வீடு கட்ட லஞ்சம் கேட்பதாக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டு

உசிலம்பட்டி அருகே எழுமலையில் நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் செய்ய இ.சேவை மையத்தில் கிராம மக்களிடம் லஞ்சம் கேட்பதாக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-01-30 11:30 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

உசிலம்பட்டி அருகே எழுமலையில் நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் செய்ய இ.சேவை மையத்தில் கிராம மக்களிடம் லஞ்சம் கேட்பதாக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு எழுமலை பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் நீலமேகம் தலைமை முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்ட எழுமலையில் வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் செய்ய இ.சேவை மையத்தில் கிராம மக்களிடம் ரூ.18 ஆயிரம் வரை லஞ்சம் கேட்பதாக 17 வார்டு அதிமுக கவுன்சிலர் பக்ரூதின் உள்பட கவுன்சிலர்கள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு பதிலளித்த தலைவர் ஜெயராமன் பேசுகையில் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.இதன் பின் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

Tags:    

Similar News