கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனையா? - நாகை ஆட்சியர் அறிவிப்பு
நாகை மாவட்டத்தில் வெளிமாநில கள்ளச்சாராயம், புகையிலை மற்றும் மதுபான வகைகள் , போதைப் பொருட்கள் விற்பனை செய்வது. கள்ளச் சாராயம் காய்ச்சுவது மற்றும் ஊரல் போன்ற போதைப் பொருட்கள் குறித்து தெரிய வந்தால் "வாட்ஸ்ஆப் எண் 94981 81257 மற்றும் நாகை எஸ்.பியிடமும் தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
Update: 2024-06-24 05:14 GMT
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெளிமாநில கள்ளச்சாராயம், புகையிலை மற்றும் மதுபான வகைகள் / போதைப் பொருட்கள் விற்பனை செய்வது. கள்ளச் சாராயம் காய்ச்சுவது மற்றும் ஊரல் போன்ற போதைப் பொருட்கள் குறித்து தங்களது நகரம். கிராமப் பகுதிகளில் தெரிய வந்தால் "வாட்ஸ்ஆப் எண் 94981 81257 மற்றும் "மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் பேசலாம்" என்ற தொலைபேசி எண் 84281 03090 ஆகியவற்றில் பொதுமக்கள் தாமாக முன்வந்து தகவல் அளித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள பெட்டிக் கடைகளில் புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதையும் மேற்படி எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேற்படி தகவல்கள் சரியானது என ஊர்ஜிதம் செய்யப்படும் பட்சத்தில் தொடர்புடைய நபர் / நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக தகவல் அளிப்பவரின் விவரங்கள் அனைத்தும் ரகசியமாக பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.