கள்ளச்சாராய விற்பனை வாட்ஸ் அப்பில் வீடியோ வைரல்

மயிலாடுதுறை நல்லத்துக்குடி ஓம்சக்தி நகரில் சாராய விற்பனை நடைபெறும்’ காட்சிகள் வாட்ஸ் அப்பில் வைரல். சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது.

Update: 2024-03-19 18:21 GMT

தேவா

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. மயிலாடுதுறை மாவடட்டத்தில் மயிலாடுதுறை மக்களவை தொகுதிக்குட்பட்ட பூம்புகார், மயிலாடுதுறை, சீர்காழி சட்டம்னற தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு தேர்தல் பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுவினர், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினரும் சோதனை சாவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போலீசார், தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் கட்டுப்பாட்டையும் மீறி மயிலாடுதுறையில் சட்டத்திற்கு புறம்பாக பாண்டி சாராய விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி மற்றும் பயன்பாடற்ற ரயில்வே பாதை, பல்லவராய்ப்பேட்டை, திருஇந்தளூர், பொட்டவெளி, கிட்டப்பா பாலம் அருகே காவிரி கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாண்டி சாரயம் சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. நல்லத்துக்குடி ஓம்சக்தி நகரில் மணி என்பவர் பாண்டி சாரயம் விற்பனை செய்வதாக வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இதனை தொடர்ந்து மயிலாடுதுறை மதுவிலக்கு போலீசார் ஓம்சக்தி நகரில் சாராயம் விற்பனையில் ஈடுபட்ட மயிலாடுதுறை மேலஒத்தசரகு பகுதியை சேர்ந்த தேவா என்பவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.
Tags:    

Similar News