கெங்கவல்லியில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது
கெங்கவல்லி அருகே வீட்டில் கள்ள சாராயத்தை பதுக்கி விற்றவரை போலீசார் கைது செய்து, 7 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Update: 2024-01-09 10:40 GMT
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டியில், சாராயம் பதுக்கி விற்பனை செய்யப்படுவ தாக ஆத்தூர் டிஎஸ்பி நாகராஜனுக்கு புகார் சென்றது. அவரது தலைமையில், கெங்கவல்லி எஸ்ஐ நிர்மலா மற்றும் போலீசார் அப்பகு 'தியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர், அப்போது ஆணையாம்பட்டி ஊராட்சி குயவர் தெருவைச் சேர்ந்த பெரியசாமி மகன் பாண்டியன் (55) என்பவர் வீட்டில், சாராயம் விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. சோதனையில் வீட்டின் பின்புறம் பதுக்கிய 7 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, பாண்டியனை கைது செய்து, ஆத்தூர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி ஆத்தூர் மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.