நாட்டு மாடுகள் அறிமுக நிகழ்ச்சி
சேலம் சீலநாயக்கன்பட்டியில்நாட்டு மாடுகள் வளர்ப்பதை ஊக்கப்படுத்துவது தொடர்பான அறிமுக நிகழ்ச்சி நடந்தது.;
Update: 2024-02-29 07:27 GMT
நாட்டு மாடுகள் அறிமுக நிகழ்ச்சி
மத்திய அரசின் சகாகர் பாரத் அமைப்பின் சார்பில் சேலம் சீலநாயக்கன்பட்டியில்நாட்டு மாடுகள் வளர்ப்பதை ஊக்கப்படுத்துவது தொடர்பான அறிமுக நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு எப்.ஓ.சி. பார்மல் தயாரிப்பு நிறுவன தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். சகாகர் பாரத் நிறுவன தேசிய நெசவாளர்களின் பிரமுகர் சப்தர் ஸ்ரீசிங்ராய் கலந்து கொண்டு பேசுகையில், நாட்டு மாடுகளை வளர்க்க விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் நாட்டு மாடுகள் பண்ணைகளை நிறுவி வருகிறோம். இந்த மாடுகளில் இருந்து பெறப்படும் சத்தான பொருட்கள் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு விவசாயிகளிடையே நாட்டு மாடுகள் குறித்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் பயன்அடைந்து வருகின்றனர் என்றார். நிகழ்ச்சியில் சகாகர் பாரத் நிறுவனம் சார்ந்த நிர்வாகிகள் பாரதி பட், கைலாஸ் மணி, ரவிகுல திலகம், அன்பரசு, பிஜ்ஜூ எலியாஸ், ஜெயலட்சுமி சின்ஹாராய், கல்யாண சுந்தரம், அபிநயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.